அரண்மனை-2 படத்துக்காக 103 அடி நீள அம்மன் சிலை

» Download This File
அரண்மனை-2 படத்துக்காக 103 அடி நீள அம்மன் சிலை

ஹன்சிகா, ராய் லட்சுமி, வினய் நடித்து சுந்தர் சி டைரக்டு செய்த ‘அரண்மனை’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘அரண்மனை-2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இது, திகில் நிறைந்த பேய் படம் ஆகும்.

இந்த படத்தில், சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக திரிஷா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சுந்தர் சி நடிப்பதுடன் டைரக்டும் செய்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தின் உச்சக்கட்ட பாடல் காட்சிக்காக சென்னை பின்னி மில் ஸ்டூடியோவில், 103 அடி நீளமுள்ள அம்மன் சிலை அமைக்கப்பட்டு 7 நாட்களாக படப்பிடிப்பு நடக்கிறது.

சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, 2 ஆயிரம் துணை நடிகர்-நடிகைகள், 200 நடன கலைஞர்கள் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக டைரக்டர் சுந்தர் சி. தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

‘‘இந்திய திரையுலகில், படப்பிடிப்புக்காக இத்தனை நீளமான அம்மன் சிலை இதுவரை எந்த படத்துக்கும் அமைக்கப்படவில்லை. தினமும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகலாக பணிபுரிந்து 25 நாட்களில் இந்த அம்மன் சிலையை அமைத்தார்கள். பொதுவாக அம்மன் சிலைகள் நின்றபடியோ அல்லது உட்கார்ந்த நிலையிலோதான் இருக்கும்.

பொள்ளாச்சி மாசாணி அம்மன் சிலை மட்டுமே படுத்த நிலையில், அதுவும் வானத்தை பார்த்து படுத்த நிலையில் இருக்கும். ‘அரண்மனை-2’ படத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அம்மன் சிலை, 103 அடி நீளத்தில் ஒரு பக்கமாக படுத்த நிலையில் உள்ளது. இவ்வளவு நீளமுள்ள சிலை எந்த கோவிலிலும் இல்லை. இந்த சிலை முன்பு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனம் ஆடுவது போல் படமாக்குவதற்கு வேறு எங்கும் இடமும் இல்லை என்பதால், மீனம்பாக்கம் அருகே உள்ள பின்னி மில் ஸ்டூடியோ மைதானத்தை தேர்ந்தெடுத்தோம்.

» Download This File

‘‘அலை ஒடுங்கி மலை நடுங்க ஆணவத்தின் சிறகொடிக்க அம்மா வா…வா…’’ என்ற உச்சக்கட்ட பாடல் காட்சியை அங்கு படமாக்கினோம். இந்த சிலையையும், படப்பிடிப்பையும் பார்ப்பதற்காக பொதுமக்கள் தினமும் குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். அப்படி வருகிற சில பெண்கள் அருள் வந்து சாமி ஆடுகிறார்கள். அவர்களுக்கு தீபாராதனை காட்டுவதற்காகவே ஒருவரை நியமித்து இருக்கிறோம். இதுவரை எந்த படத்துக்கும் இத்தனை நீளமுள்ள பிரமாண்ட சிலை பயன்படுத்தப்படாததால், இதை ‘லிம்கா’ சாதனைக்கு விண்ணப்பிக்க இருக்கிறோம்.’’

இவ்வாறு டைரக்டர் சுந்தர் சி கூறினார்.

» Download This File
1 2 3