இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதலிடம்: 3–வது இடத்தில் சுருதிஹாசன்

இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதலிடம்: 3–வது இடத்தில் சுருதிஹாசன்

இன்றைய தலைமுறையினரின் வாழ்வில் இரண்டற கலந்து இருப்பது இணையதள தொடர்பு. புதுப்புது விஷயங்களை இணையதள தேடல் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட ‘பாலிவுட்’ திரைப்பட ஹீரோயின்களில் முதல் இடத்தை பிடித்தது யார் என்று பிரபல நிறுவனம் ஒன்று சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் ஒட்டு மொத்த ஹீரோயின்களில் ராதிகா ஆப்தே முதல் இடம் பிடித்து இருக்கிறார்.

பாலிவுட் ஹீரோயின்களில் இணைய தளம் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் வரிசையில் சன்னி லியோன் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்தார். இப்போது அவரை தள்ளி விட்டு ராதிகா ஆப்தே முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து இருப்பது, இவர் நடித்த ‘அகல்யா’ குறும்படம், ஆபாச வீடியோ சர்ச்சை, ஹண்டர் படம், இவர் பற்றிய காதல் கிசுகிசு போன்ற காரணங்களால் இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.

இது தவிர 30 வயதுக்கு கீழ் உள்ள பாலிவுட் நடிகைகளில் இணையதள தேடலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். தீபிகா படுகோனே 2–வது இடத்தில் இருக்கிறார். சுருதிஹாசனுக்கு 3–வது இடம் கிடைத்து இருக்கிறது. அடுத்த இடங்கள் இந்தி நடிகைகள் அனுஷ்கா சர்மா, இலியானா, அலியாபட், கங்கணா ராவத், யாமி கவுதம் ஆகியோருக்கு கிடைத்து இருக்கிறது. தமன்னா 9–வது இடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் இருப்பவர் ஷரதா கபூர்.