இன்டர்நெட்டில் பரவும் நடிகை அனுபமா ஆபாச படங்கள்: போலீசில் புகார் கொடுக்க முடிவு

இன்டர்நெட்டில் பரவும் நடிகை அனுபமா ஆபாச படங்கள்: போலீசில் புகார் கொடுக்க முடிவு

கேரளாவில் மலையாள நடிகைகளின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கமலஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த மலையாள நடிகை ஆஷாசரத்தின் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. இது பற்றி ஆஷாசரத் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவரது ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரேமம் படத்தில் நடித்த இன்னொரு நடிகையான அனுபமா பரமேஷ்வரனின் ஆபாச படங்களும் இப்போது இணையதளத்தில் உலவுகிறது. இதை அறிந்த நடிகை அனுபமா அதிர்ச்சி அடைந்தார்.

இணையதளத்தில் வெளியான படங்கள் போலியானவை என்று புகார் கூறிய அவர் இது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறும் போது, நடிப்புலகில் இருக்கிறோம் என்பதற்காக எங்களை பற்றி இத்தகைய படங்களை போலியாக உருவாக்கி உலவ விடுபவர்களுக்கும் அம்மா, தங்கை இருக்கிறார்கள் என்பதை நினைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.