சூரியின் ஐ போனை உடைத்த அஞ்சலி

» Download This File
சூரியின் ஐ போனை உடைத்த அஞ்சலி

அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 31-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் சுராஜ் பேசும்போது, அஞ்சலி பற்றிய ரகசியங்கள் அவிழ்த்து விட்டார்.

» Download This File

அவர் பேசும்போது, அஞ்சலிக்கு இந்த படத்தில் அமைதியான கதாபாத்திரம். ஆனால், படப்பிடிப்பு முடிந்து 6 மணிக்கு மேல் இவரது அட்டகாசத்தை ஆரம்பித்துவிடுவார். அவருக்கென்று ஒரு சில உதவியாளர்கள் வைத்திருப்பார். அவர்களுடன் சேர்ந்து 9 மணி வரை கிரிக்கெட் விளையாடுவார்.

நாளை படப்பிடிப்பு இருக்கிறது, தற்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டார். ஒருமுறை சூரி, அவரிடம் கோபமாக பேச, அவரது ஐபோனை அஞ்சலி உடைத்துவிட்டார். இப்போது அஞ்சலியிடம் அதற்கான பணம் கேட்டு கெஞ்சி வருகிறார் சூரி என்று பேசினார். இதை மேடையிலிருந்தவாறே ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார் அஞ்சலி.

» Download This File