கெத்தாக படப்பிடிப்பை முடித்த உதயநிதி

கெத்தாக படப்பிடிப்பை முடித்த உதயநிதி
‘நண்பேன்டா’ படத்திற்குப் பிறகு உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கெத்து’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மேலும் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜும், வில்லனாக விக்ராந்தும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ‘மான்கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார். உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை தொடர்ந்து சென்னை, ஐதராபாத், கோவா உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி இருந்தது. தற்போது அதுவும் முடிந்து படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்களை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 18-ம் தேதி படத்தை திரையிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.