அல்லு அர்ஜூன் படத்தில் குத்தாட்டம் போடும் அனுஷ்கா

» Download This File
அல்லு அர்ஜூன் படத்தில் குத்தாட்டம் போடும் அனுஷ்கா

 
அனுஷ்கா படங்களுக்கு தனி அந்தஸ்து ஏற்பட்டு இருக்கிறது. பாகுபலியில் இவர் நடித்த பாத்திரம் பேசப்பட்டது. ருத்ரமாதேவியில் மகாராணியாக வந்து ரசிகர்களிடம் தனி இடம் பிடித்திருக்கிறார்.

அடுத்து ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டு பெண்ணாக வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கு, தமிழ் இரண்டிலும் இந்த படம் வெளியாகிறது. பெரிய படங்களுக்கே கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் உள்ளன.

» Download This File

இந்த நிலையில், ஒரு தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அனுஷ்கா சம்மதித்து இருக்கிறார். அல்லு அர்ஜூன்–ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் இதில் அனுஷ்கா ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்.

அனுஷ்கா நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். நட்புக்காக அனுஷ்காவின் வேண்டுகோளை ஏற்று இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார்.

எனவே, அல்லு அர்ஜூன் கேட்டுக் கொண்டதால் அவரது படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அனுஷ்கா சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

» Download This File