அஜித் பிறந்தநாளுக்கு சிம்பு கொடுக்கும் பரிசு | Ajith’s birthday gift to give simbu

» Download This File

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வாலு’. நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ளார். மேலும், சிம்புவின் ஆஸ்தான காமெடியர்களான சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை மே 9-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, அஜித்துடைய பிறந்தநாளில்தான் தன்னுடைய படத்தை வெளியிட திட்டமிட்டார். ஆனால், ‘உத்தமவில்லன்’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்கள் அன்றைய தேதியில் வெளிவருவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இருந்தாலும் தன்னுடைய தலைவரின் பிறந்தநாளுக்கு ஏதாவது ஒன்றை புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்த சிம்பு, தற்போது அஜித் பிறந்தநாளில் ‘வாலு’ படத்தின் மற்றொரு டிரைலரை வெளியிடவிருக்கிறார்.

» Download This File

‘வாலு’ படம் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பெரும்பகுதியை சென்னையிலேயே படமாக்கியுள்ளனர். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 14-ந் தேதி வெளியாகியிருந்தது. சிம்பு நடிப்பில் கடைசியாக ‘போடா போடி’ என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படம் 2012-ல் வெளியானது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் ‘வாலு’ படம் வெளிவருவதால் இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

» Download This File
1 2