விஷ்ணுவர்த்தனின் அடுத்த ஹீரோ அஜீத்

Ajith Next Movie Director

தல 56 படத்தைத் தொடர்ந்து தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அஜீத் முடிவு செய்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது 3 வது முறையாக இருவரும் கைகோர்க்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கசிந்துள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நவம்பர் பத்தாம்தேதி தீபாவளியன்று வெளியிடத் திட்டமிட்டு வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்களாம். செப்டம்பருக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டால் அக்டோபரில் மற்றவேலைகளை முடித்து நவம்பர் பத்தில் வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கிடையே அஜித்தின் அடுத்தபடத்தை இயக்கும் இயக்குநரை முடிவு செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. கே.வி.ஆனந்த் உட்பட சில இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அஜித் முடிவுசெய்திருப்பது இயக்குநர் விஷ்ணுவர்த்தனை என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாகவே இதுதொடர்பான பேச்சுகள் நடந்து கொண்டிருந்ததாகவும் இப்போது அது உறுதியாகியிருப்பதாகவும் மிகவும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அஜீத் இதைப் பற்றி இன்னும் உறுதியாக சொல்லவில்லை எனினும் விஷ்ணுவர்த்தனின் அடுத்த படத்தில் நடிக்கவே அஜீத் விரும்புவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பில்லா 3 யில் அஜீத்தை நடிக்க வைக்க விஷ்ணுவர்த்தன் விரும்பியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், எனினும் அஜீத் பில்லா 3யில் நடிக்கப் போகிறாரா அல்லது வேறு புதிய கதையா? என்பது தெரியவில்லை. அஜீத் மீண்டும் பில்லாவாக மாறுவாரா?