தனுஷுக்கு ரெண்டாவது ஜோடியான அஜித் மச்சினி

தனுஷுக்கு ரெண்டாவது ஜோடியான அஜித் மச்சினி

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதன்முதலாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனால், இப்படத்தில் இவருக்கு இரண்டு ஹீரோயின்கள் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. அதன் முதற்கட்டமாக, லட்சுமிமேனன் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமானார். மேலும், இன்னொரு நாயகியாக தற்போது அஜித்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான நடிகை ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போதுதான் தமிழுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தனுஷ் நடிக்கும் படம் தவிர, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வீரசிவாஜி’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை வித்யாபாலனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.