மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜித்

» Download This File
மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜித்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், அஸ்வின், வித்யூலேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

» Download This File

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், அக்டோபர் முதல் வாரத்தில் ஒரு பாடலைப் படமாக்க வெளிநாடு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தல 56’ என்று அழைத்து வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று நள்ளிரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதும் மேலும் ஒரு தகவலாக அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘தல 56’ படப்பிடிப்பில் இயக்குனர் சிவாவிடம் அஜித், “உங்களுடைய படப்பிடிப்பில் டென்ஷன் இல்லாமல் ரொம்ப ரிலாக்ஸா இருக்கேன். இன்னொரு கதை இருந்தால் சொல்லுங்க. பண்ணலாம்” என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவுடன் இயக்குனர் சிவா மிகவும் நெகிழ்ந்து போய், “கண்டிப்பாக சார்” என்று தெரிவித்திருக்கிறார்.

அஜித்தின் இந்த பேச்சால் மீண்டும் இயக்குனர் சிவாவுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

» Download This File