மீண்டும் அஜித் படத்தில் வித்யூலேகா

மீண்டும் அஜித் படத்தில் வித்யூலேகா

‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘ஜில்லா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் வித்யூலேகா ராமன். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வீரம்’ படத்திலும் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கியிருந்த இப்படத்தில் ஒருசில காட்சிகளில்தான் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், வித்யூலேகாவுக்கு தனது அடுத்த படத்திலும் வாய்ப்பு வழங்கியுள்ளார் சிறுத்தை சிவா. ஆம், அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கி வரும் புதிய படத்தில் வித்யூலேகா ராமன் நடிக்கவுள்ளார். இதை வித்யூலேகாவே உறுதிப்படுத்தியுள்ளார். மீண்டும் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார். அநேகமாக, இவருக்கு ஜோடியாகத்தான் வித்யூலேகா நடிப்பார் என கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாது, விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘புலி’ படத்திலும் வித்யூலேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.