வீரம் படம் பாணியில் சண்டை போடும் அஜித்

» Download This File
வீரம் படம் பாணியில் சண்டை போடும் அஜித்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹசான் நடித்துள்ளார். மேலும், லட்சுமி மேனன் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வில்லன்கள். பாலிவுட்டை சேர்ந்த கபீர் சிங் இப்படத்தில் முதல் வில்லனாக நடித்தார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.

» Download This File

இரண்டாவது வில்லனாக ‘ஆதவன்’ படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடித்த ராகுல் தேவ் இப்படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சி இன்று சென்னை பின்னி மில்லில் செட் அமைத்து உருவாக்கி வருகிறார்கள். சமீபத்தில் ராகுல் தேவ்வுக்கு அஜித் பிரியாணி செய்து விருந்து கொடுத்தார்.

தற்போது ராகுல் தேவ்வுடன் பின்னி மில்லில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் எதிரிகளுக்கு விருந்து கொடுத்து சண்டை போடுவார். அதுபோல் தற்போது ராகுல் தேவ்வுக்கு விருந்து கொடுத்து சண்டை போட்டு வருகிறார்.

» Download This File