காயத்தை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித்

காயத்தை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித்

 
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வேதாளம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடித்துள்ளார்கள். மேலும் ராகுல் தேவ், கபீர் சிங், அஸ்வின், வித்யூலேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இதில் அஜித் நடனமாடும் சில காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். அப்போது அவருக்கு காலில் அடிபட்டிருக்கிறது. ஏற்கனவே ‘ஆரம்பம்’ படத்தின்போது காலில் அடிபட்டு, ப்ளேட் வைக்கப்பட்டது. அதே இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால் வலியால் துடித்திருக்கிறார். உடனடியாக படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்தது. இதற்கு அஜித் இறுதிநாள் படப்பிடிப்பு, நிறுத்த வேண்டாம், ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டு ஒய்வெடுத்திருக்கிறார்.

அதற்கு பிறகு, மீண்டும் கால் வலியோடு முழுப் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார். அவரது காலில் அடிபட்டதால், நேற்று ‘வேதாளம்’ படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இப்படத்தின் முதல் பாதி டப்பிங் பணிகளை அஜித் முடித்துவிட்டார். இரண்டாம் பாதி டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியிருக்கிறது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரவருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.