அஜித் ரசிகர்களுக்கு இன்று மதியம் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு

அஜித் ரசிகர்களுக்கு இன்று மதியம் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றனர். படப்பிடிப்பில் அஜித் அனைவரிடமும் எளிமையாக பழகி வருவதை, படத்தில் பணிபுரியும் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோபோ சங்கர், தல படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகப் போவதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தல ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பு அனேகமாக, படத்தின் தலைப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்திற்கு ‘வரம்’, ‘அடங்காதவன்’, ‘ஆரவாரம்’ ஆகிய தலைப்புகளை பரிசீலனையில் வைத்துள்ளனர். இதில், ஏதாவது ஒன்றை படத்தின் தலைப்பாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், மதியம் 1 மணி வரை அனைவரும் காத்திருந்துதான் ஆகவேண்டும். கண்டிப்பாக, அது அஜித் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸான அறிவிப்பாகத்தான் இருக்கும்.