ரசிகர்களை ஏமாற்றிய அஜித்

ரசிகர்களை ஏமாற்றிய அஜித்

 விநாயகர் சதுர்த்தியன்று அன்று விஜய்யின் ‘புலி’ வெளியாகவிருந்தது. பின்னர் அப்படம் அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிப்போனது. விஜய் படம் விலகி போனாலும், விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் ‘கபாலி’ பர்ஸ்ட் லுக் மற்றும் கமலின் ‘தூங்காவனம்’ ட்ரைலர், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது.

அதன்படி, ரஜினியின் கபாலி, கமலின் தூங்காவனம் ஆகிய படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் அஜித் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். படத்தின் பெயராவது வெளிவரும் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அன்றைய தினத்தில் கோலிவுட்டின் பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர் படங்களின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகவிருந்ததால், அவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு, தனது படத்தின் போஸ்டரை அஜித் வெளியிட விரும்பவில்லை என்பதே காரணமாக கூறப்படுகிறது.