சுருதிஹாசனுடன் இத்தாலி சென்ற அஜித்

சுருதிஹாசனுடன் இத்தாலி சென்ற அஜித்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனனும், வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித், லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித், கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். இந்த படப்பிடிப்புகள் சென்னையில் பின்னி மில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டது.

தற்போது அடுத்த கட்டமாக படக்குழு இத்தாலி சென்றுள்ளது. அங்கு அஜித் மற்றும் சுருதிஹாசன் சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குனர் சிவாவும் ஒளிப்பதிவாளர் வெற்றியும் முன்னதாகவே இத்தாலி சென்று விட்டனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தல 56’ என்று அழைத்து வருகிறார்கள்.

1 2