போலீஸ் கமிஷனருடன் நடிகர் விவேக் சந்திப்பு

» Download This File
போலீஸ் கமிஷனருடன் நடிகர் விவேக் சந்திப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை வழக்கமான சோதனைக்கு பின்னரே போலீசார் உள்ளே அனுமதித்தனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை விவேக் சந்தித்து பேசினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் விவேக் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

» Download This File

இந்நிலையில் அக்டோபர் 15–ந்தேதி அப்துல்கலாமின் பிறந்தநாள் வருகிறது. அன்று மெரினா கடற்கரையில் விவேக் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான அனுமதியை கேட்பதற்காகவே விவேக் இன்று கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக விவேக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– கிரீன் கலாம் மரம் நடும் திட்டம் என்ற பெயரில் 2010–ம் ஆண்டில் இருந்து 1 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன். இதுவரை தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சென்னையிலும் இதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அப்துல்கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15–ந்தேதியன்று மெரினா கடற்கரையில் மாணவ–மாணவிகள் பங்கேற்கும் மரம் நடுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க உள்ளேன். சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

» Download This File