சென்னையில் நில நடுக்கம் ஏற்பட்டால் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடையும்: நிபுணர் குழு ஆய்வில் தகவல்|Chennai, 80 percent of buildings damaged in the quake: expert group to study the information

இந்தியாவில் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை5 மண்டலங்களாக நிபுணர்கள் பிரித்துள்ளனர். இதில் முதல் மண்டலம் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. இரண்டாவது மண்டல பகுதி என்பது மிக குறைவான பாதிப்பை தரக்கூடியதாகும்.மூன்றாவது மண்டல பகுதியில் ஓரளவு பாதிப்பும், 4–வது மண்டல பகுதியில் அதிக பாதிப்பும், 5–வது மண்டல பகுதியில் மிக, மிகஅதிக பாதிப்பும் ஏற்படும் என்றும் நிபுணர்கள் வரையறுத்து எச்சரித்துள்ளனர்.இந்த வரையறைப்படி தமிழ் நாட்டில் 80 சதவீத பகுதிகள் முதல் மண்டலத்துக்குட்பட்டதால் அதாவது நிலநடுக்கத்தால் அச்சுறுத்தல் இல்லாததாக உள்ளன.ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகள் நிலநடுக்க மூன்றாவது மண்டலத்தில் உள்ளன.எனவே நிலநடுக்கம் வந்தால் இந்த நகரங்களில் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் அதிக பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள்கருதுகிறார்கள்.நிலநடுக்கம் பாதிப்பு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரழிவு நிர்வாக மையம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆள் இல்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி, அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி படம் பிடிக்கப்பட்டு சென்னையில் உள்ள கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 3 மாடிக்கு மேல் கொண்ட 22,758 கட்டிடங்களின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது.அப்போது அந்த கட்டிடங்களில் சுமார் 30 சதவீத கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் அமைப்புடன் கட்டப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் சென்னையில் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் பூகம்பம் ஏற்படும் பட்சத்தில் 80 சதவீத கட்டிடங்கள் சேதம் அடையும் என்ற அதிர்ச்சி தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது.குறிப்பாக சென்னையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் என்ஜினீயர்கள் வடிவமைத்து உரிய விதிமுறைப்படி திட்டமிட்டு கட்டப்பட்டவை அல்ல. சென்னையில் அப்படி கட்டப்பட்ட கட்டிடங்கள் 80 சதவீதத்துக்கும் மேல் உள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தகட்டிங்கள் தாங்காது என்று அண்ணா பல்கலைக்கழக பேரழிவு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.சிறிய வீடு மற்றும் ஒரு மாடியுடன் கூடிய வீடு கட்டுபவர்கள் உரிய அனுமதி பெறாமல், தாங்களாகவோ அல்லது மேஸ்திரியை வைத்தோ கட்டியுள்ளார்களாம். வீடு கட்டி முடித்த பிறகு அவர்கள் என்ஜினீயர் மூலம் சான்றிதழ் பெற்று விடுகிறார்கள் என்று பேரழிவு மையம் ஆதாரங்களை திரட்டியுள்ளது.அண்ணா பல்கலைக்கழக பேரழிவு நிர்வாகமையத்தினர் தங்களது ஆய்வு தகவல்களை தொகுத்து ஒரு அறிக்கையாக தயாரித்து கடந்த 2011–ம் ஆண்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். அதில் சென்னையில் இனி கட்டப்படும் கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஆனால் இது வரை எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.