75 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதியர் இறுதிப் பயணத்தையும் ஒன்றாக தொடங்கினர்

75 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதியர் இறுதிப் பயணத்தையும் ஒன்றாக தொடங்கினர்

தற்போதைய திருமணங்கள் சில ஆண்டுகள் கூட நீடிப்பதில்லை. சிலரது விவகாரத்தில் மாதம், வாரக் கணக்கில் கூட அந்த திருமண பந்தம் நீடிக்காமல் பிரிந்துவிட நேர்கின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த வயதான தம்பதியரான அலெக்சாண்டர் மற்றும் ஜேனட் டோஸ்கோ, இணை பிரியாமல் 75 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து தாம்பத்திய வாழ்க்கைக்கு பெருமை சேர்த்ததுடன் ஒரே படுக்கையில் படுத்தபடியும், ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடியும் சமீபத்தில் இறந்துள்ளனர்.