6-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த 80-களின் நடிகர்-நடிகைகள் சந்திப்பு

6-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த 80-களின் நடிகர்-நடிகைகள் சந்திப்பு

1980-களில் நடித்த நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்திப்பு நடத்திக் கொள்வது வழக்கம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த சந்திப்புகளை நடிகர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக 80-களின் நடிகர், நடிகைகளின் சந்திப்பு சமீபத்தில் சென்னை ஓலிவ் கடற்கரையில் உள்ள நீனா ரெட்டி கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்றது.

இதில், 80-களில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், பாக்யராஜ், சத்யராஜ், பிரபு, மோகன், சரத்குமார், நரேஷ், பிரதாப் போத்தன், ஜெயராம், ரகுமான், சுமன், ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், பானுசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுவரை 80-களின் சந்திப்புகளில் கலந்துகொண்ட ரஜினி, தற்போது நடந்த இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

மேலும், நடிகைகளில் லிசி, குஷ்பு, சுஹாசினி, சுமலதா, சரிதா, ராதா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா, மேனகா, பார்வதி, ஜெய்ஸ்ரீ, ரேவதி, ஜெயசுதா, பூனம், ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை சுஹாசினி, லிசி, குஷ்பு மூவரும் இணைந்து செய்திருந்தார்கள்.

கடந்த ஆண்டு பீச் உடையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, இந்த வருடம் முழுக்க சிவப்பு நிறத்திலான ஆடைகள் பாணியில் நடந்தது. நடிகர், நடிகைகள் சந்தித்த இடமும் முழுக்க சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.