400 தியேட்டர்களில் வெளியாகும் மாஸ்

» Download This File

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா-நயன்தாரா நடித்துள்ள மாஸு என்கிற மாசிலாமணி வருகிற 29-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் தமிழ்நாட்டில் 400 திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிடவுள்ளனர்.

» Download This File

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில், இப்படத்தை 500 திரையரங்களில்தான் திரையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் வெளிவந்த 36 வயதினிலே, புறம்போக்கு, டிமான்ட்டி காலனி ஆகிய படங்கள் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்திருப்பதால், இப்படத்திற்கு கூடுதல் தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், இப்படத்துக்கு 400 திரையரங்குகளே கிடைத்துள்ளன. இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். சூர்யா-நயன்தாராவுடன் பிரேம்ஜி அமரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ப்ரணிதா, சமுத்திரகனி, பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

» Download This File