காதலனிடம் எப்போதும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள்

» Download This File

உறவுகள் என வந்து விட்டால், சில எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வது கண்டிப்பான ஒன்றாகும். இது உங்கள் உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மட்டும் என இருக்கும் சில விஷயங்களையும் உறுதிப்படுத்தும். உங்கள் காதலனிடம் சொல்லக்கூடாத சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அத்தகைய விஷயங்கள் எந்த காரணம் கொண்டும் உங்கள் காதலனிடம் சொல்ல வேண்டாம். சரி, இப்போது அந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

உங்கள் தோழிகளின் ரகசியங்கள் உங்கள் காதலனிடம் கண்டிப்பாக சொல்லக்கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்களை நம்பி உங்கள் தோழிகள் உங்களிடம் அவர்களைப் பற்றிய ரகசியங்களை கூறியிருப்பார்கள். அதனை நீங்கள் ரகசியமாக வைத்திருக்கவும் அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.

சொல்லப்போனால், உங்கள் ரகசியங்களையும் அவர்கள் அப்படி தானே காப்பார்கள். அதனால் அந்த நம்பிக்கையை குலைத்து விடாதீர்கள். இதுப்போக, பெண்கள் பேசிக் கொள்ளும் விதம் ஆண்களுக்கு புரிவதில்லை. அதனால் சில விஷயங்களை அவர்களிடம் கூறாமல் இருப்பதே நல்லதே.

உங்கள் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) உங்கள் கடவுச்சொல்லை கண்டிப்பாக உங்கள் காதலனிடம் கூறவே வேண்டாம். அவர் மீது அதிகமான நம்பிக்கை இருந்தாலும் சரி, வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அவர் மீது காதல் இருந்தாலும் சரி, கடவுச்சொல் போன்ற சில விஷயங்களை கண்டிப்பாக சொல்லக்கூடாது.

» Download This File

அவர் குடும்பத்தின் மீதான வெறுப்பு இந்த ரகசியத்தை உங்களுக்குளே வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இதை உங்கள் காதலனிடமோ அல்லது நண்பர்களிடமோ கண்டிப்பாக கூறாதீர்கள்.

உங்கள் காதலனின் தாய் அல்லது சகோதரிகளோடு உங்களுக்கு அனைத்து நேரத்திலும் ஒத்துப்போகாது. இதை அவரிடம் கூற வேண்டிய அவசியமில்லை. இது அவரை வருத்தப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் உறவையும் சீர்குலைக்கும்.

விரிவான உங்கள் கடந்த காலம் பழைய காதலனைப் பற்றி தற்போதைய காதலனிடம் கூறினாலும், அந்த காதலைப் பற்றி விரிவாக கூற வேண்டாம். அதன் ரகசியத்தை காக்கவும். அதற்காக அவரை ஏமாற்றுகிறீர்கள் என்ற அர்த்தமில்லை. தேவையில்லாத பிரச்சனையை தான் தவிர்க்கிறீர்கள்.
news_09-10-2014_93Untitled-1-300x158

» Download This File