உடல் எடையை குறைக்க அனுஷ்காவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை

» Download This File

 

 

 

 

நடிகை அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டு பெண்ணாகவும், மெலிந்த தோற்றத்துடனும் நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குண்டு பெண்ணாக தோன்றுவதற்காக அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்தார்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் பாகுபலி–2 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன் அனுஷ்கா உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு வருகிறார்.

» Download This File

உடல் எடையை குறைக்க தெரபி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா செல்கிறார். இந்த மாத தொடக்கத்திலேயே அனுஷ்கா அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ‘ருத்ரமாதேவி’ படத்தின் முன்னோட்ட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் அனுஷ்காவின் அமெரிக்க பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. நாளை ‘ருத்ரமாதேவி’ படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு அனுஷ்கா அமெரிக்கா சென்று தெரபி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

‘பாகுபலி–2’ படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகள் ஐதராபாத்தில் தொடங்கி விட்டன. இயக்குனர் ராஜமவுலி நேற்று முன்தினம் ‘ராமோஜி பிலிம்சிட்டி’ வந்து தொழில்நுட்ப குழுவினருடன் படப்பிடிப்பு சம்பந்தமான ஆலோசனைகள் நடத்தினார். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது.

 

 

» Download This File
1 2