தனுஷின் மாரி பாடல்கள் மே 25ம் தேதி வெளியீடு

» Download This File

காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தற்போது தனுஷை வைத்து ‘மாரி’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ், மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

» Download This File

இதையடுத்து இப்படத்தின் பாடல்களை மே 25ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

» Download This File