இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் ஏப்ரல் 23ம் தேதி வெளியீடு|On April 23 release of the movie trailer for the launch location

‘நீர்ப்பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிவரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் வடிவுக்கரசி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்திலும், விஷ்ணு ‘நீர்ப்பறவை‘ என்ற படத்திலும் ஏற்கெனவே நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் ‘இடம் பொருள் ஏவல்’ படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவருடைய இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை ஏப்ரல் 23ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர். விரைவில் படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.