பிலிம்பேர் விருதுகள் 2014: கத்தி படம் 7 முக்கிய விருதுகளுக்கு தேர்வு

» Download This File

இந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருது பிலிம்பேர். தற்போது 2014-ம் ஆண்டு வெளியான சிறந்த படம் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு இவ்விருதை வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படம் பிலிம்பேர் விருதுக்கு 7 பிரிவுகளில் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

அதாவது, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர் ஆகிய பிரிவுகளுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது. இதில் எந்த பிரிவில் விருதை பெறும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

» Download This File

கத்தி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைக்க, விஜய் பாடிய ‘செல்பிபுள்ள‘ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருந்தார். 2014-ல் வெற்றிபெற்ற மிகப்பெரிய படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

» Download This File
1 2 3 5