2 வருடங்களில் காணாமல் போகும் கதாநாயகிகள்: ஸ்ரேயா வருத்தம்

2 வருடங்களில் காணாமல் போகும் கதாநாயகிகள்: ஸ்ரேயா வருத்தம்

ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தமிழில் கடைசியாக ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011–ல் இப்படம் வந்தது. அதன் பிறகு தெலுங்கில் நடித்த ‘பவித்ரா’ படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

தற்போது இந்தியில் தயாரான ‘திரிஷ்யம்’ படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. வருகிற 31–ந் தேதி இந்தியா முழுவதும் இப்படம் ரிலீசாகிறது. நாயகனாக அஜய் தேவ்கான் நடித்துள்ளார். அவருக்கு வேறு படவாய்ப்புகள் வரவில்லை.

ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என்ற கிசுகிசுக்களும் பரவி உள்ளன. இதுகுறித்து, ஸ்ரேயா கூறும்போது, ‘திரிஷ்யம்’ படத்துக்கு பிறகு வேறு படங்கள் என் கைவசம் இல்லை. ஆனாலும் தமிழில் இன்னொரு ரவுண்ட் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழில் சரியான வாய்ப்புக்காக காத்து இருக்கிறேன். இப்போது வருகிற கதாநாயகிகள் இரண்டு வருடங்களில் காணாமல் போய் விடுகிறார்கள். எல்லா நடிகைகளும் திறமையானவர்கள்தான். ‘திரிஷ்யம்’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து உள்ளேன். அம்மா வேடத்தில் நடிப்பது தவறல்ல என்றார்.