கமலின் பாபநாசம் ஜூலை 17ம் தேதி ரிலீஸ்?

» Download This File

கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘உத்தம வில்லன்’ படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கமலுக்கு ஜோடியாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்திருந்தார்கள். மேலும் மறைந்த கே.பாலச்சந்தர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபநாசம்’ படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

» Download This File

இப்படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் வெளிவந்த ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்காகும். மலையாள படத்தை இயக்கிய ஜீது ஜோசப் தமிழ் ரீமேக்கையும் இயக்கியுள்ளார்.

தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் கமல் நடித்து வருகிறார். கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் இப்படம் கிரைம் திரில்லராக உருவாகி வருகிறது.

» Download This File