வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

» Download This File

ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன்மேன் என்று பல சூப்பர் ஹீரோக்கள் ரவுண்டு கட்டி ரகளை செய்யும் படம் தான் ’அவெஞ்சர்ஸ்’. 2012-ல் இதன் முதல் பாகமான ‘அவெஞ்சர்ஸ் அசம்பிள்’ வெளியாகி பாராட்டிலும், வசூலிலும் சக்கை போடு போட்டது.

» Download This File

இந்த சீரிஸின் இரண்டாவது பாகமான, ’அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ இந்தியாவில் கடந்த 24-ம் தேதி வெளியானது.

’ஸச் எ மைண்ட் ப்ளோயிங் மூவி’ என்று இங்கிலீஷ் பீட்டர்களும், ’ஹல்க் கலக்கிட்டாம்பா’ என்று லோக்கல் ஆடியன்சும் ஒரு சேர இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளினர். விமர்சகர்களிடமும் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.

வெளியான இரண்டே நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்திய அவெஞ்சர்ஸ்-2 வின் வசூல் தற்போது 187.7 மில்லியன் டாலராக (சுமார் 1200 கோடி) உள்ளது.

இதே காலகட்டத்தில் 2012-ல் வெளியான அவெஞ்சர்ஸ் 207.4 மில்லியன் டாலர் (சுமார் 1321 கோடி) வசூல் செய்தது, சற்றே சிந்திக்கத்தக்கது.

» Download This File
1 2 3