ஜூன் 12ம் தேதி சந்தானத்தின் இனிமே இப்படித்தான் ரிலீஸ்

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

முருகானந்த் இயக்கி வரும் இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்களும் படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்பணிகளை முடிக்கவுள்ள நிலையில், படத்தை ஜூன் மாதம் 12ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.