இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ மே 10ம் தேதி வெளியீடு

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’.

இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

முருகானந்த் இயக்கியுள்ள இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்வு செய்யப்பட்டது.

தற்போது இப்படத்தின் பாடல்களை மே 10ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதில் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களான சிம்பு, ஆர்யா, உதயநிதி, வி.டி.வி கணேஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம்